Friday, 21 June 2019

Revaluation apply செய்த மாணவர்கள் கவனத்திற்கு..

Revaluation-க்காக - exam answer paper apply செய்த மாணவர்கள் கவனத்திற்கு ...

Exam answer paper நகல்  தற்போது வந்துள்ளது,  apply செய்த மாணவர்கள் ஆபிஸில் answer paper Xerox copy யை பெற்றுக் கொள்ளவும்

மேலும், Revaluation apply செய்ய விருப்பம் உள்ள மாணவர்கள் 24.06.19 திங்கள் கிழமைக்குள்(கடைசி நாள்)  ரூ 400 ஆபிஸில் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்..

Regards
Shahul...

Friday, 29 March 2019

TAFE LTD VADIPATTI. -SBM மாணவர்கள் கவனத்திற்கு



Tafe Ltd நிறுவனம், நமது SBM கல்லூரியிலிருந்து 40 ( mech, auto,) மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளனர்

தற்போது வாரியத்தேர்வு நடப்பதால் நம் கல்லூரியில் நேர்முக வாளாகத் தேர்வு நடத்த முடியவில்லை ஆகையால் மாணவர்கள் தங்கள் Biodataவை சாகுல் சாரிடம் கொடுத்து பெயரை பதிவு செய்து கொள்ளவும்.

குறிப்பிட்ட தேதியில் கம்பெனியில் நேர்முக தேர்வு  நடக்கவிருக்கிறது
தேர்வு தேதி பின்னர் தெரிவிக்கப்படும் அது சமயம் மாணவர்கள் கம்பெனிக்கு நேரில் சென்று நேர்முகத் தேர்வில் பங்கு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்

Regards
M.Shahul Hameed Hod/ Mech
9789556443

Sunday, 24 March 2019

*ஸ்டைல் பைக்குகளும் * *சாலை விபத்துகளும்*


*பெற்றோர்களே!*

*சம்பாதித்த காசு பணத்தை கருத்தாக சேமித்து வைக்கும் நமக்கு, நமது  இளைஞர்களின் உயிரை மட்டும் சேமிக்கத் தெரியவில்லையே ?*

*நம் வீட்டு வாலிப பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமாக செல்லங்கொடுத்து, நம் சக்திக்கும் அதிகமா செலவுக்கு பணமும் கொடுத்து  கவலையே அறியாத மைனர்களாக வளர்க்கின்றோம்*

*நம்முடைய  சம்பாத்தியத்தின் அந்தஸ்தை வெளிப்படுத்த வேண்டி , நம் பிள்ளைகள் மனம் கஷ்டப்பட கூடாது என்று நம் பிள்ளைகளுக்கு வாங்கித் தரும் அதி நவீன பைக்குகள் தான் , நம்முடைய சந்ததிகளை சவக்குழிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது*

*குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய புதிய ஸ்டை பைக்குகளில் உச்சபட்ச வேகத்தில் தேசிய நெடுச்சாலையில் ரேஸ் வைத்து  வளைந்து சுழித்து வரும் போகும் வாகனங்களை கர்ணம் தப்பினால் மரணம் என்பது போல மயிரிழை இடை வேளியில் முந்தி செல்லவதை பார்க்கும் போது, என்ன நடக்குமோ,  ஏது நடக்குமோ  என நாம் தான் பயத்தில் பதைபதைத்துச் செல்ல வேண்டி உள்ளது... *

*அவ்வாறு அடிக்கடி  பைக்கில் zig zag அடித்து  பறக்கும் நம் கல்லூரி மாணவன் ஒருவனை பிடித்து பைக்கை பிடிங்கி வைத்துக் கொண்டு அவன் தந்தையிடம் எச்சரிக்கை செய்யலாம் என வரச்சொன்னோம்

அவரும் வந்தார் அவரிடம் அவன் பைக்கில் செய்யும் சேட்டைகளையும் விபத்து குறித்தும் எச்சரிக்கை செய்தோம்...

அவரோ அதை சிம்பிளா எடுத்துக் கொண்டு .. என்ன சார் பண்றது வீட்டுக்கு ஒரே பையன் செல்லமா வளர்த்திட்டேன் ... இந்த வயசுல இந்த மாதிரி குசும்பெல்லாம் சகஜம் தான் ஸார் Take it easy sir.. என்றார் ...

அப்ப ரோட்டில் விபத்தாகி விழுந்து கிடந்தாலும் ... Take it easyனு சொல்லுவேங்களா என்றோம்...

பதில் சொல்ல முடியாமல்... ஸாரி என்றார்..
பெரும்பாலான பெற்றோர்கள் இவ்வாறு தான் பொருப்பில்லாமல் இருக்கிறார்கள்..

*நம்முடைய பிள்ளைகள் எதிர் பாராத வகையில்  ரோட்டில் அடிபட்டு, குற்றுயிரும், கொலை உயிருமாக கிடந்து இறந்து போகும் போது, அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளை நாம் முழுமையாக உணர்ந்து  பார்க்கிறோமா ?*

*நமக்குத் தெரிந்தது  இரண்டு வார்த்தைகள் தான்*

*ஒன்று "ஸ்பாட் அவுட்"*

*இரண்டாவது "  108ல  தூக்கிட்டு போறப்பையே death"*

*இந்த இரண்டு வார்த்தைகளுக்குள்,  விபத்துக்கு உள்ளானவர்களின்  ஒட்டு மொத்த வாழ்க்கையையும் ஒரு ஓலைப் பாயைப் போல சுருட்டி தூர எறிந்து விட்டு அடுத்த வேலைக்கு போய் விடுகிறோம்*

*இது போன்ற  விபத்துக்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட, அதன் முதல் காரணம் நம்முடைய பொறுப்பின்மை தான்*


*உங்கள் பிள்ளைகளை அழைத்து, அமரவைத்துப் பேசுங்கள் வாழ்க்கையை பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்*

*அந்தப் பேச்சுக்கள் ஒரு இயல்பான உரையாடலாக இருக்கட்டும்*

*தயவு செய்து உளுத்துப் போன அறிவுரைகளை மட்டும் அவர்களுக்கு செய்து விட வேண்டாம்*

*காரணம், இன்றைய இளைஞர்கள் யாருடைய அறிவுரைகளையும் கேட்க தயாரில்லை.*

*அது அவர்களுடைய தவறல்ல*
*அது , இந்த தலைமுறையின் தவறு*

*எனவே, வழக்கமான அறிவுரைகளுக்கு பதிலாக, அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள், விபத்து குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்துங்கள்... அதிவேக ஸ்டைல் பைக்குகளை வாங்கி தராதீர்கள்.. அவைகள் வெறும் பொம்மைகள் இல்லை சீறி பாயும் எமன்கள்.. என்பதை மனதில் கொள்ளுங்கள்..

வாகன விதிமுறை குறித்து பள்ளி, கல்லூரிகளிலேயே மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பாடப்பிரிவில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.. ஏனெனில்..


 இந்தியாவில் அதிகம் சாலை விபத்துக்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் பலியாகின்றனர்.

 தமிழகத்தில் நாள்தோறும் 32 பேர் சாலை விபத்துக்களில் சிக்குகின்றனர். தமிழக அரசு சாலை விபத்துக்களை தவிர்க்க ஆண்டுதோறும் கணிசமான தொகையை நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டில் சாலை பாதுகாப்பு பணிக்கு 58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆகவே நாமும் பொறுப்புடன் இருந்து
சாலை விதிகளை மதிப்போம்..
விபத்துகளை தவிர்ப்போம்


நெடுஞ்சாலை மயானம்…

வீட்டில் சொல்லிவிட்டே 
புறப்படுகிறது 
ஒவ்வொரு பயணமும்…! 
திரும்பி வரும் நம்பிக்கையில் 
விரும்பியே ஆரம்பமாகிறது…!! 

எந்த கோட்டையை பிடிக்க 
அத்தனை அவசரம்..!! 
குருட்டு வேகத்தில் 
விவேகம் தொலைத்து 
தொடங்கிய இடத்திலேயே 
குப்புற கவிழ்கிறது எல்லாமும்..!! 

கொஞ்சம் பொறு..!! 
மலையை கட்டியிழுக்க 
யாரும் போவதில்லை..! 
தலை போகும் அவசரத்தில் 
தடுமாறி விடாதே 
தலையே போய்விடும்..!! 

கொஞ்சம் பொறு..!! 
உன் ஆளை பிடிக்க முன்னாலை பாயாதே...
அந்தோணி காலேஜும் அங்கு தான் இருக்கும்...
கல்லாத்து பாலமும் கடக்கத் தான் வேண்டும்..
கனபொழுது காக்காமல்... காலமெல்லாம் காணாமல் போகாதே..

சாலையில் மட்டுமல்ல 
மனித மூளையிலும் 
வேகத்தடை வேண்டும்..!! 
பயண வேகத்தில் 
மைல்க்கல் தூரம் நினைப்பவன் 
பெத்தவங்களை நினைப்பதில்லை..!! 

நெடுஞ்சாலையெல்லாம் 
மயானம் ஆகும் முன், 
கரம் சிரம் புறம் வரிசையில் 
அறத்தையும் கொஞ்சம் சேருங்கள், 
அரிய உயிரின் மதிப்பை 
பெற்றவளிடம் கேளுங்கள்..!! 

வழிவிட்டு வாழுங்கள், 
மெதுவாய் செல்வதும் 
பொதுநலக் கோட்பாடே..!! 
விதியை மதியால் வெல்லலாம், 
சாலை விதியை மதி 
மாறும் உன் தலைவிதி..!!

M.Shahul Hameed Hod/ Mech
9789556443

Saturday, 23 March 2019

எனது கல்லாரியின் கடைசி நாள் - விக்னேஸ்.. மூன்றாம் ஆண்டு

அன்று நாம் நினைத்திருக்க மாட்டோம் 
கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளில் 
நமக்குள் இருந்த பயமும் தயக்கமும், 
இன்று, கடைசி நாள் பிரிவில் 
கண்ணீரும் ஏக்கமுமாய் மாறும் என. 

அன்று யாரென்றே தெரியாமல், 
பேசவே தயங்கிக் கொண்டிருந்த நம்மை 
அருக‌ருகே அமர வைத்த காலம், 
இன்று இதோ வ‌ந்துவிட்டது, மனதால் நெருங்கி 
பிரிய மனம் இல்லாதவர்களை 
ஆளுக்கு ஒரு மூலையாய் துரத்தி விட. 

அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்த‌ 
நமது கல்லூரி பயணம், நம் மனங்களில் 
விட்டுச் சென்றுள்ளது 
பல பசுமையான நினைவுகளையும் 
சில மறக்க முடியாத ரணங்களையும். 

சில குறும்பான‌ காரணங்களாலும், 
காரணமே இல்லாமலும் 
நாம் வைத்த செல்ல பெயர்களால் 
மறந்தே போனோம் பல‌ நிஜ பெயர்களை. 
இனி,யாருமில்லை அப்பெயர்களைச் 
சொல்லி கொஞ்சலாக‌ நம்மை அழைக்க‌. 

பல நாட்கள் அவகாசம் இருந்தாலும் 
கடைசி நாள் காலையில், 
முதல் இருக்கை மாணவிகளிடம் இருந்து 
கடன் வாங்கி, அவசர அவசரமாய் 
எழுதி முடித்து மதியத்திற்குள் சமர்ப்பிக்கப்பட்ட‌ 
ஒப்படைப்புகள் எல்லாம், சாம்பலாகின்றன‌ இன்றோடு. 

காலையிலேயே திறக்கப்பட்டு இடைவேளைக்குள் 
காலி செய்யப்பட்டுவிடும் நம் உணவு டப்பாக்கள். 
எனினும்,ஒரு போதும் நாம் உண்டதில்லை, 
நம் வீட்டு உணவுகளை மட்டும். 

ஒவ்வொரு செமஸ்டர் எழுதும் போதும் 
முடிவு செய்வோம்.அடுத்த செமெஸ்டருக்கு, 
முதலில் இருந்தே படிக்க ஆரம்பிப்ப தென்று.
இதோ வந்து விட்டது கல்லூரியின் இறுதி நாள். 
படித்தும் முடித்து விட்டோம் ஒரு வழியாக... 

இனி இருக்கப் போவதில்லை, 
கடைசி இருக்கை அரட்டைகளும், 
வெள்ளிக்கிழமை பிரியாணிகளும், 
சில்லரைகளை மட்டும் வைத்துக் 
கொண்டு கேண்டின் செல்வதும், 
தோழனின் தந்தை மரணத்திற்கு 
நாம் எல்லோரும் அழுததும், 
கல்லூரிப் பேருந்து பயணங்களும், 
'கேக்' பூசிய பிற‌ந்த நாட்களும், 
தேர்வுகளில் தோள் கொடுத்த நட்பும், 
பொய் காரணங்கள் கூறி எடுக்கப்பட்ட‌ விடுப்புகளும், 
தேர்வு முடிவுகளுக்கான பயங்கலந்த காத்திருப்புகளும் 
இன்னும் பட்டியலுக்குள் அடங்காத பலவும்…. 

‘இது நிரந்திர பிரிவில்லையே!’ , 
எப்படியும் எல்லோரும் தொடர்பில் 
தானே இருக்கப் போகிறோம், 
என ஒருவரை ஒருவர் தேற்றினாலும் 
தவிர்க்க முடியவில்லை 
விழிகளின் ஓரத்தில் எட்டிப் பார்க்கும் கண்ணீர்த் துளிகளை... 

நட்புடன்... விக்னேஸ் .. மூன்றாம் ஆண்டு

மாணவர்கள் தேர்வு சமயத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது?



மாணவர்கள் பரபரப்பாக வாரியத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள். இந்த சமயத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் சில உண்டு. தேர்வு நேரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்...

* ‘தேர்வு’ என்கிற அச்சமின்றி நிதானமாக, தன்னம்பிக்கையுடன் தயாராகுங்கள். நீங்கள் செமஸ்டர் முழுவதும் படித்த பாடத்தில் இருந்துதான் கேள்விகள் வரப்போகின்றன என்பதால் பயம் தேவையில்லை.


* அடுத்த நாளுக்கான, அடுத்த தேர்வுக்கான பாடங்களை படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.


* இடைவேளை நாட்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.


* படிக்கும் வேளையில் குழுவாக சேர்ந்து படித்தால் உற்சாகமாக இருக்கும். சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். குழுவாக படிக்க முடியாவிட்டால், தேர்வு முடியும் வரை பெற்றோரை உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம்.


* வழக்கமாக தூங்கச் செல்லும் நேரத்திற்கு ஓய்வெடுக்க கிளம்பிவிடுங்கள். இரவு 11 மணிக்குப் பிறகும் விழித்திருந்து படிப்பதால் உடம்புக்குத்தான் கேடு. அவை நினைவில் தங்குவதும் குறைவுதான். எனவே நேரத்திற்கு தூங்கச் சென்றுவிட்டு, அதிகாலையில் எழுந்து படிக்கலாம்.


* நாளைய தேர்வுக்கான உபகரணங்களை முந்தைய நாள் இரவிலேயே தயார்படுத்தி வையுங்கள். பென்சில், ஸ்கேல், ரப்பர், ஸ்கெட்ச், ஜியாமெட்ரிக் பாக்ஸ், பேனா, கூடுதல் பேனா அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் தவறிவிடாமல் இருக்க கண்ணாடி ‘பவுச்’சில் மொத்தமாக வைத்துக் கொள்ளலாம்.


* அதுபோலவே கல்லாரி அடையாள அட்டை, பஸ் பயண பாஸ், தேர்வு அடையாள அட்டை அனைத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். வீட்டைவிட்டு கிளம்பும் முன் அனைத்தையும் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.


* எளிதில் ஜீரணம் ஆகும் காய்கறி உணவுகள், பழங்களை சாப்பிடுங்கள். சோம்பலாக இருந்தால் சூடான பானம் அல்லது குளிர்ச்சியான ஜூஸ் இவற்றைப் பருகி புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது சுறுசுறுப்பாக படிக்க உதவியாக இருக்கும்.




செய்யக்கூடாதவை


* உடலை பாதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. கிரிக்கெட் ஆடுவது, பைக் சாகசங்களில் ஈடுபடுவது, கிணற்றில் குதித்து குளிப்பது, மரங்களில் ஏறி விளையாடுவது போன்ற காயம் ஏற்பட வாய்ப்புள்ள செயல்களில் ஈடுபடக்கூடாது. அவசியம் ஏற்பட்டால் கவனத்துடன் செயல்பட வேண்டும்.


* குறைந்த நேரமே படிப்பதற்கு இருப்பதாக எண்ணிக்கொண்டு இருக்கையைவிட்டு எழுந்திருக்காமல் படிக்கக்கூடாது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுமார் 5 நிமிடங்களாவது உலாவ வேண்டும்.


* இரவு நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்கக்கூடாது. ‘தூங்காமல் படிக்கிறேன் பார்’ என்று கடும் சவாலுடன் முழித்திருந்து படித்துவிட்டு, தேர்வறையில் அசதியாக இருந்தால் பரீட்சையை திருப்தியாக எழுத முடியாது.


* படிக்காத பாடங்கள் நிறைய இருப்பதாக புலம்பிக் கொண்டிருக்கக்கூடாது. படித்த பாடங்களை திரும்ப நினைவுபடுத்தி, தெரிந்ததை தெளிவாக எழுதி தேர்ச்சி பெறுவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.


* அவசியமான காரியங்களுக்கு மட்டும் நேரம் செலவிட வேண்டும். செல்போனில் விளையாடுவது, நண்பருக்காக காத்திருத்தல், சின்ன வேலையாக வெளியே சென்றுவிட்டு வருவதாக எண்ணி, நீண்ட நேரமாக படிப்பிற்கு இடைவெளி விடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.


* தேர்வு எழுதி முடித்தபின், எழுதிய தேர்வு பற்றி நண்பர்களுடன் கலந்து ஆலோசிப்பது வேண்டாம். தேர்வை நன்றாக எழுதவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கவும் வேண்டாம். அடுத்த தேர்வை சிறப்பாக எழுதுவது பற்றி யோசியுங்கள், செயலில் இறங்குங்கள்.


* புதிய வகை உணவுகளை ருசிப்பதை தவிருங்கள். மசாலா- எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை குறைத்துவிடுங்க


M.Shahul Hameed Hod/Mech

YAZAKI LTD SELECTION LIST

YAZAKI SELECTION LIST
SLNO. REGNO. NAME DEPT
1 17243482 ALANT JOSEPH DAE
2 17243490 DINESH KUMAR P DAE
3 17243499 KARTHIK KUMAR M DAE
4 17243516 PANDIAN T DAE
5 17243521 RAJAMANIKKAM M DAE
6 17243531 SURYA P DAE
7 17243532 SYLENDHAR T DAE
8 17243533 THANGARAJ G DAE
9 17243535 VASEEMRAJA I DAE
10 17243537 VENKADESAN K DAE
11 17243538 VETRI VEL G DAE
12 17243539 VIJAY B DAE
13 17244075 KUMAR R DAE
14 17244082 SASIKUMAR C DAE
15 17244083 SATHISHKUMAR C DAE
16 17266982 ARUNKUMAR M DAE
17 17266984 KATHIRESAN S DAE
18 17266985 MATHANKUMAR M DAE
19 17266986 SACHINKUMAR A DAE
20 16218398 KATHIRESAN K A DME
21 16218420 MOHAMED BASITH R A DME
22 16218433 NAGARAJ P A DME
23 17214852 ABINESH S A DME
24 17214853 AHAMED BUHARI A A DME
25 17214854 AJITH A A DME
26 17214858 ALEXANDAR T A DME
27 17214861 ANBUSELVAN A A DME
28 17214866 ARUN PANDI R A DME
29 17214872 AZHAGURAJA M A DME
30 17214873 BALAJI D A DME
31 17214874 BALAJI V A DME
32 17214876 BALAMURUGAN A A DME
33 17214879 BAVANESH KUMAR S A DME
34 17214885 BOOPATHIRAJAN C A DME
35 17214892 DINESH KUMAR V A DME
36 17214893 DINESH S A DME
37 17214894 DINESHKUMAR T A DME
38 17214895 DINESHWARAN M A DME
39 17214900 GANAKASABAPATHI V A DME
40 17214902 GNANASEKAR N A DME
41 17214904 GOBALAKRISHNAN K A DME
42 17214905 GOBALAKRISHNAN S A DME
43 17214906 GOBALAKRISHNAN V A DME
44 17214909 GOKULAVIJAYAN S A DME
45 17214912 GOPINATHAN N A DME
46 17214913 GUNALAN P A DME
47 17214914 GURUVURAJ A A DME
48 17214922 JEEVA BHARATHI V A DME
49 17214924 JEEVARAJ J A DME
50 17214925 JEGADEESH M A DME
51 17214926 JEYAPANDI S A DME
52 17214929 KAMATCHI RAJ T.M A DME
53 17214937 KARTHIKEYAN V A DME
54 17214939 KATTURAJA A A DME
55 17214943 KOWSHIKBALAJI S B DME
56 17214952 MAHENDRAN M B DME
57 17214953 MAHESH KANNAN P B DME
58 17214958 MANICKAM P B DME
59 17214961 MANIKANDAN M B DME
60 17214962 MANIKANDAN N B DME
61 17214969 MANOJ KUMAR V B DME
62 17214976 MATHAN PRASATH A B DME
63 17214978 MAYIL MURUGAN K B DME
64 17214982 MOHAMED AZARDEEN M B DME
65 17214991 MOHANA PRADEEP S B DME
66 17214992 MOHANRAM T B DME
67 17214999 MURUGAN K B DME
68 17215002 MUTHUPANDI P B DME
69 17215003 MUTHUSIVA E B DME
70 17215009 NARASIMMARAJA S B DME
71 17215012 NAVEEN KUMAR K B DME
72 17215013 NAVEEN KUMAR R B DME
73 17215016 NAVEENKUMAR K B DME
74 17215018 NIJENDRAN L B DME
75 17215022 PALANIVEL M B DME
76 17215030 PRABAKARA PANDIAN P B DME
77 17215031 PRABAKARAN P B DME
78 17215036 PRASANTH M B DME
79 17215038 PROBEL DIVAHAR R B DME
80 17215039 PUGALENTHI N C DME
81 17215041 RAHUL K C DME
82 17215042 RAJ KUMAR K C DME
83 17215049 RAJASELVAM M C DME
84 17215054 RAMADURAI V C DME
85 17215056 RANJITH KUMAR S C DME
86 17215057 RANJITHKUMAR K C DME
87 17215060 SABARI KUDALINGAM M C DME
88 17215062 SAKTHIBALAN R C DME
89 17215064 SAKTHIVEL S C DME
90 17215066 SANJAYKUMAR S C DME
91 17215070 SARAVANA KUMAR K C DME
92 17215071 SARAVANA KUMAR M C DME
93 17215075 SARAVANAPANDIAN R C DME
94 17215076 SASIKUMAR P C DME
95 17215077 SATHEESKUMAR S C DME
96 17215080 SEENIVASAN P C DME
97 17215081 SELVAKUMAR J C DME
98 17215083 SHANMUGAM C C DME
99 17215084 SHANMUGARAJ A C DME
100 17215087 SIVAPRADEEP B C DME
101 17215093 SURESH K C DME
102 17215100 THANAPALPERINPAM M C DME
103 17215110 VARUN KUMAR B C DME
104 17215115 VELLAIPANDI D C DME
105 17215119 VIGNESH K C DME
106 17215121 VIGNESH M C DME
107 17215122 VIJAY P C DME
108 17215124 VIJAYAN A C DME
109 17215125 VIKNESH S C DME
110 17215128 VISHWANATH GANDHI G C DME
111 17215129 YASWANTH R C DME
112 17215132 YUVARAJ PANDIAN M C DME
113 17220097 MUTHUKUMAR N C DME
114 17256426 AJAY K D DME
115 17256428 AJITH KUMAR M D DME
116 17256433 CHRISTOBER S D DME
117 17256435 DEVANATH V P D DME
118 17256438 ESWARAN B D DME
119 17256439 ESWARARAJ V D DME
120 17256444 HARIHARAN N D DME
121 17256448 KANNAN G D DME
122 17256455 MANIKANNAN S D DME
123 17256458 MARUTHARAJ N D DME
124 17256459 MUKILAN P D DME
125 17256460 MUNEESWARAN B D DME
126 17256464 NAGARAJ P D DME
127 17256465 NAGARAJ S D DME
128 17256466 NAVEEN KUMAR G D DME
129 17256472 PRAKASH K D DME
130 17256481 SATHIYAPRAKASH C D DME
131 17256484 SIVAKUMAR S D DME
132 17256485 SRIDHAR R D DME
133 17256486 SRINIVASA PERUMAL M D DME
134 17256488 TAMILSELVAN P D DME
135 17308623 ANBUSELVAM K EEE
136 17308624 ARAVIND P EEE
137 17308631 DINESH RAJ K EEE
138 17308632 DURGADEVI A EEE
139 17308634 GOPALA KRISHNAN S EEE
140 17308635 HARI PRASATH S EEE
141 17308639 JEYA SURIYA C EEE
142 17308655 NIVETHIKA R EEE
143 17308658 PRABHAKARAN S EEE
144 17308659 PRAHALADAN M EEE
145 17308661 PRAKASHRAJ. G EEE
146 17308667 ROJA S EEE
147 17308671 SIVASELVI S EEE
148 17308677 VENKATESAN M EEE
149 17308678 VIGNESHWARAN M EEE
150 17308679 VINITHA G EEE
 
M.SHAHUL HAMEED HOD/ MECH! Placement Officer 9789556443  
& Chakravarthi