Saturday, 23 March 2019

மாணவர்கள் தேர்வு சமயத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது?



மாணவர்கள் பரபரப்பாக வாரியத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள். இந்த சமயத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் சில உண்டு. தேர்வு நேரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்...

* ‘தேர்வு’ என்கிற அச்சமின்றி நிதானமாக, தன்னம்பிக்கையுடன் தயாராகுங்கள். நீங்கள் செமஸ்டர் முழுவதும் படித்த பாடத்தில் இருந்துதான் கேள்விகள் வரப்போகின்றன என்பதால் பயம் தேவையில்லை.


* அடுத்த நாளுக்கான, அடுத்த தேர்வுக்கான பாடங்களை படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.


* இடைவேளை நாட்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.


* படிக்கும் வேளையில் குழுவாக சேர்ந்து படித்தால் உற்சாகமாக இருக்கும். சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். குழுவாக படிக்க முடியாவிட்டால், தேர்வு முடியும் வரை பெற்றோரை உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம்.


* வழக்கமாக தூங்கச் செல்லும் நேரத்திற்கு ஓய்வெடுக்க கிளம்பிவிடுங்கள். இரவு 11 மணிக்குப் பிறகும் விழித்திருந்து படிப்பதால் உடம்புக்குத்தான் கேடு. அவை நினைவில் தங்குவதும் குறைவுதான். எனவே நேரத்திற்கு தூங்கச் சென்றுவிட்டு, அதிகாலையில் எழுந்து படிக்கலாம்.


* நாளைய தேர்வுக்கான உபகரணங்களை முந்தைய நாள் இரவிலேயே தயார்படுத்தி வையுங்கள். பென்சில், ஸ்கேல், ரப்பர், ஸ்கெட்ச், ஜியாமெட்ரிக் பாக்ஸ், பேனா, கூடுதல் பேனா அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் தவறிவிடாமல் இருக்க கண்ணாடி ‘பவுச்’சில் மொத்தமாக வைத்துக் கொள்ளலாம்.


* அதுபோலவே கல்லாரி அடையாள அட்டை, பஸ் பயண பாஸ், தேர்வு அடையாள அட்டை அனைத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். வீட்டைவிட்டு கிளம்பும் முன் அனைத்தையும் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.


* எளிதில் ஜீரணம் ஆகும் காய்கறி உணவுகள், பழங்களை சாப்பிடுங்கள். சோம்பலாக இருந்தால் சூடான பானம் அல்லது குளிர்ச்சியான ஜூஸ் இவற்றைப் பருகி புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது சுறுசுறுப்பாக படிக்க உதவியாக இருக்கும்.




செய்யக்கூடாதவை


* உடலை பாதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. கிரிக்கெட் ஆடுவது, பைக் சாகசங்களில் ஈடுபடுவது, கிணற்றில் குதித்து குளிப்பது, மரங்களில் ஏறி விளையாடுவது போன்ற காயம் ஏற்பட வாய்ப்புள்ள செயல்களில் ஈடுபடக்கூடாது. அவசியம் ஏற்பட்டால் கவனத்துடன் செயல்பட வேண்டும்.


* குறைந்த நேரமே படிப்பதற்கு இருப்பதாக எண்ணிக்கொண்டு இருக்கையைவிட்டு எழுந்திருக்காமல் படிக்கக்கூடாது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுமார் 5 நிமிடங்களாவது உலாவ வேண்டும்.


* இரவு நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்கக்கூடாது. ‘தூங்காமல் படிக்கிறேன் பார்’ என்று கடும் சவாலுடன் முழித்திருந்து படித்துவிட்டு, தேர்வறையில் அசதியாக இருந்தால் பரீட்சையை திருப்தியாக எழுத முடியாது.


* படிக்காத பாடங்கள் நிறைய இருப்பதாக புலம்பிக் கொண்டிருக்கக்கூடாது. படித்த பாடங்களை திரும்ப நினைவுபடுத்தி, தெரிந்ததை தெளிவாக எழுதி தேர்ச்சி பெறுவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.


* அவசியமான காரியங்களுக்கு மட்டும் நேரம் செலவிட வேண்டும். செல்போனில் விளையாடுவது, நண்பருக்காக காத்திருத்தல், சின்ன வேலையாக வெளியே சென்றுவிட்டு வருவதாக எண்ணி, நீண்ட நேரமாக படிப்பிற்கு இடைவெளி விடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.


* தேர்வு எழுதி முடித்தபின், எழுதிய தேர்வு பற்றி நண்பர்களுடன் கலந்து ஆலோசிப்பது வேண்டாம். தேர்வை நன்றாக எழுதவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கவும் வேண்டாம். அடுத்த தேர்வை சிறப்பாக எழுதுவது பற்றி யோசியுங்கள், செயலில் இறங்குங்கள்.


* புதிய வகை உணவுகளை ருசிப்பதை தவிருங்கள். மசாலா- எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை குறைத்துவிடுங்க


M.Shahul Hameed Hod/Mech

No comments:

Post a Comment

Please write your comments here