Tuesday, 19 March 2019

ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்களே இதை படியுங்கள்

🐥 சுவிட்ஸர்லாந்தில் நடந்த ரெண்டு அதிசயம் !!!

“நீங்க சும்மா இருந்தா போதும் ! மாதம் 1,72,000 ரூபா உங்கள் வீடுதேடி வரும் !”

😊கேட்கவே சந்தோசமா இருக்குதுல்ல...

அப்படி ஒரு அதிசய அறிவிப்பை “சுவிஸ்” அரசாங்கம் சில நாட்களுக்கு முன்னால் அறிவித்ததும் உலகமே ஆச்சரியத்தில் உறைந்தது...😳

1. ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதம் “அடிப்படை” ஊதியமாக 1,75,000 ரூபாய் ( சுவிஸ் மதிப்பில் சுமார் 2500 Franc ) வழங்கப்படும் !

2.ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம்
“அடிப்படை” ஊதியமாக 45,000 ரூபாய்
( சுவிஸ் மதிப்பில் சுமார் 625 Franc ) வழங்கப்படும் !

3. சுவிஸ் நாட்டில் 5 வருடமாக குடியிருக்கும் வெளிநாட்டவருக்கும் இந்தச் சட்டம் செல்லுபடியாகும் !

🐣 அதாவது.. ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தை இருந்தால்..

அந்த குடும்பத்திற்கு “அடிப்படை” ஊதியமாக மாதம் ரூ. 3,95,000 அரசாங்கம் வழங்கும் !

இப்படி ஒரு சட்டத்தை அமலாக்கம் செய்ய ஒரு பொது வாக்களிப்பை அரசாங்கம் நடத்தியது !

அந்த வாக்களிப்பின் முடிவு உலகையே மற்றோரு முறை அதிர்ச்சியில் உறைய வைத்தது ! 😳

5 ல் 4 பேர் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர் !78% சதவீதம் பேர் “சுவிஸ்” அரசின் ‘அடிப்படை’ ஊதியம் எங்களுக்கு "வேண்டாம்" என்று..😳

தங்கள் முடிவைத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துள்ளனர் !

இந்த முடிவுக்கு அவர்கள் சொல்லும் காரணம் இன்னும் வியப்பாகவுள்ளது ! 😳

1. இந்த அறிவிப்பைக் கேட்டு, இன்னும் சில வருடங்களில் கோடிக் கணக்கான மக்கள் எங்கள் நாட்டில் சட்டரீதியாகவும், சட்ட விரோதமாகவும் நுழைவார்கள்.

2. இந்த அடிப்படை ஊதிய சட்டம் எங்களையும் எங்கள் சந்ததியினரையும் சோம்பேறிகளாக மாற்றிவிடும்.

3. அடிப்படை ஊதியத்தால் எங்கள் அடிப்படை உரிமையை நாங்கள் இழக்க நேரிடும்.

இது சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய நாள்...

ஸ்விஸ் மக்கள் எடுத்திருக்கும் இந்த முடிவைக் கண்டு இலவசத்தில் மூழ்கிப்போன ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டும்...
தலைகுனிய வேண்டும்...

ரூ.1000, 2000 ரூபாய்க்கு சொல்ற கட்சிக்கு கண்ண மூடிக்கிட்டு ஓட்டைப் போட்டுட்டு...

இலவசமா ‘பினாயில்’ குடுத்தா கூட போட்டிப்போட்டு வாங்கி குடிக்கிறோம்...

இதுல எதுக்கு எடுத்தாலும் ஒரு பஞ்ச் டயலாக் வேற...

“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி” னு.

அநேகமா இந்த வரியை உச்சரிக்கும் கடைசி சந்ததி நாமாகத்தான் இருக்கும்...

நம் அடுத்த சந்ததி நம்மை நினைத்து  நிச்சயம் பெருமைப்பட மாட்டாங்க...

நம்மைப் போல் சுவிஸ் நாட்டிற்கென்று பல பழபெரும் பெருமைகள் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அவர்கள் சரித்திரத்தில் எழுதிவிட்டனர்... காலத்தால் அழிக்க முடியாத அவர்களது நிகழ்காலப் பெருமையை !

வாழ்த்துக்கள் சுவிஸ் மக்களே !!! 🙏

ஆனால் எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இலவசமாக பெற்றே பழகிவிட்ட நாம் எப்போது திருந்த போகிறோம்..

அன்புடன்
சாகுல்...


No comments:

Post a Comment

Please write your comments here