*பெற்றோர்களே!*
*சம்பாதித்த காசு பணத்தை கருத்தாக சேமித்து வைக்கும் நமக்கு, நமது இளைஞர்களின் உயிரை மட்டும் சேமிக்கத் தெரியவில்லையே ?*
*நம் வீட்டு வாலிப பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமாக செல்லங்கொடுத்து, நம் சக்திக்கும் அதிகமா செலவுக்கு பணமும் கொடுத்து கவலையே அறியாத மைனர்களாக வளர்க்கின்றோம்*
*நம்முடைய சம்பாத்தியத்தின் அந்தஸ்தை வெளிப்படுத்த வேண்டி , நம் பிள்ளைகள் மனம் கஷ்டப்பட கூடாது என்று நம் பிள்ளைகளுக்கு வாங்கித் தரும் அதி நவீன பைக்குகள் தான் , நம்முடைய சந்ததிகளை சவக்குழிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது*
*குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய புதிய ஸ்டை பைக்குகளில் உச்சபட்ச வேகத்தில் தேசிய நெடுச்சாலையில் ரேஸ் வைத்து வளைந்து சுழித்து வரும் போகும் வாகனங்களை கர்ணம் தப்பினால் மரணம் என்பது போல மயிரிழை இடை வேளியில் முந்தி செல்லவதை பார்க்கும் போது, என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என நாம் தான் பயத்தில் பதைபதைத்துச் செல்ல வேண்டி உள்ளது... *
*அவ்வாறு அடிக்கடி பைக்கில் zig zag அடித்து பறக்கும் நம் கல்லூரி மாணவன் ஒருவனை பிடித்து பைக்கை பிடிங்கி வைத்துக் கொண்டு அவன் தந்தையிடம் எச்சரிக்கை செய்யலாம் என வரச்சொன்னோம்
அவரும் வந்தார் அவரிடம் அவன் பைக்கில் செய்யும் சேட்டைகளையும் விபத்து குறித்தும் எச்சரிக்கை செய்தோம்...
அவரோ அதை சிம்பிளா எடுத்துக் கொண்டு .. என்ன சார் பண்றது வீட்டுக்கு ஒரே பையன் செல்லமா வளர்த்திட்டேன் ... இந்த வயசுல இந்த மாதிரி குசும்பெல்லாம் சகஜம் தான் ஸார் Take it easy sir.. என்றார் ...
அப்ப ரோட்டில் விபத்தாகி விழுந்து கிடந்தாலும் ... Take it easyனு சொல்லுவேங்களா என்றோம்...
பதில் சொல்ல முடியாமல்... ஸாரி என்றார்..
பெரும்பாலான பெற்றோர்கள் இவ்வாறு தான் பொருப்பில்லாமல் இருக்கிறார்கள்..
*நம்முடைய பிள்ளைகள் எதிர் பாராத வகையில் ரோட்டில் அடிபட்டு, குற்றுயிரும், கொலை உயிருமாக கிடந்து இறந்து போகும் போது, அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளை நாம் முழுமையாக உணர்ந்து பார்க்கிறோமா ?*
*நமக்குத் தெரிந்தது இரண்டு வார்த்தைகள் தான்*
*ஒன்று "ஸ்பாட் அவுட்"*
*இரண்டாவது " 108ல தூக்கிட்டு போறப்பையே death"*
*இந்த இரண்டு வார்த்தைகளுக்குள், விபத்துக்கு உள்ளானவர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் ஒரு ஓலைப் பாயைப் போல சுருட்டி தூர எறிந்து விட்டு அடுத்த வேலைக்கு போய் விடுகிறோம்*
*இது போன்ற விபத்துக்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட, அதன் முதல் காரணம் நம்முடைய பொறுப்பின்மை தான்*
*உங்கள் பிள்ளைகளை அழைத்து, அமரவைத்துப் பேசுங்கள் வாழ்க்கையை பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்*
*அந்தப் பேச்சுக்கள் ஒரு இயல்பான உரையாடலாக இருக்கட்டும்*
*தயவு செய்து உளுத்துப் போன அறிவுரைகளை மட்டும் அவர்களுக்கு செய்து விட வேண்டாம்*
*காரணம், இன்றைய இளைஞர்கள் யாருடைய அறிவுரைகளையும் கேட்க தயாரில்லை.*
*அது அவர்களுடைய தவறல்ல*
*அது , இந்த தலைமுறையின் தவறு*
*எனவே, வழக்கமான அறிவுரைகளுக்கு பதிலாக, அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள், விபத்து குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்துங்கள்... அதிவேக ஸ்டைல் பைக்குகளை வாங்கி தராதீர்கள்.. அவைகள் வெறும் பொம்மைகள் இல்லை சீறி பாயும் எமன்கள்.. என்பதை மனதில் கொள்ளுங்கள்..
வாகன விதிமுறை குறித்து பள்ளி, கல்லூரிகளிலேயே மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பாடப்பிரிவில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.. ஏனெனில்..
இந்தியாவில் அதிகம் சாலை விபத்துக்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் பலியாகின்றனர்.
தமிழகத்தில் நாள்தோறும் 32 பேர் சாலை விபத்துக்களில் சிக்குகின்றனர். தமிழக அரசு சாலை விபத்துக்களை தவிர்க்க ஆண்டுதோறும் கணிசமான தொகையை நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டில் சாலை பாதுகாப்பு பணிக்கு 58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆகவே நாமும் பொறுப்புடன் இருந்து
சாலை விதிகளை மதிப்போம்..
விபத்துகளை தவிர்ப்போம்
நெடுஞ்சாலை மயானம்…
வீட்டில் சொல்லிவிட்டே
புறப்படுகிறது
ஒவ்வொரு பயணமும்…!
திரும்பி வரும் நம்பிக்கையில்
விரும்பியே ஆரம்பமாகிறது…!!
எந்த கோட்டையை பிடிக்க
அத்தனை அவசரம்..!!
குருட்டு வேகத்தில்
விவேகம் தொலைத்து
தொடங்கிய இடத்திலேயே
குப்புற கவிழ்கிறது எல்லாமும்..!!
கொஞ்சம் பொறு..!!
மலையை கட்டியிழுக்க
யாரும் போவதில்லை..!
தலை போகும் அவசரத்தில்
தடுமாறி விடாதே
தலையே போய்விடும்..!!
கொஞ்சம் பொறு..!!
உன் ஆளை பிடிக்க முன்னாலை பாயாதே...
அந்தோணி காலேஜும் அங்கு தான் இருக்கும்...
கல்லாத்து பாலமும் கடக்கத் தான் வேண்டும்..
கனபொழுது காக்காமல்... காலமெல்லாம் காணாமல் போகாதே..
சாலையில் மட்டுமல்ல
மனித மூளையிலும்
வேகத்தடை வேண்டும்..!!
பயண வேகத்தில்
மைல்க்கல் தூரம் நினைப்பவன்
பெத்தவங்களை நினைப்பதில்லை..!!
நெடுஞ்சாலையெல்லாம்
மயானம் ஆகும் முன்,
கரம் சிரம் புறம் வரிசையில்
அறத்தையும் கொஞ்சம் சேருங்கள்,
அரிய உயிரின் மதிப்பை
பெற்றவளிடம் கேளுங்கள்..!!
வழிவிட்டு வாழுங்கள்,
மெதுவாய் செல்வதும்
பொதுநலக் கோட்பாடே..!!
விதியை மதியால் வெல்லலாம்,
சாலை விதியை மதி
மாறும் உன் தலைவிதி..!!
M.Shahul Hameed Hod/ Mech
9789556443
No comments:
Post a Comment
Please write your comments here